Thursday, January 23, 2014

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 3

திராவிடர்களும் ஆரியர்களும் ஒரு ஒப்பீடு...

ஆதி கால திராவிட நாகரீகத்திருக்கும், ஆரிய நாகரீகத்திற்கும் பல வேற்றுமைகள் உள்ளது. திராவிடர்களிடையேயும் ஆரியகளிடையேயும் பல வேற்றுமைகளை காணலாம். அவற்றுள் குறிப்பாக சில வேற்றுமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


திராவிடர்கள்

ஆரியர்கள்


நிலையாக குடியமர்ந்து வாழ்ந்து வந்தனர். 


பயிர் தொழில் செய்து அமைதியான  வாழ்வு வாழ்ந்து வந்தனர்.


ஒற்றுமையுடன் ஓரிடத்தில் வாழ்ந்து வந்தனர்.



மக்கள் பாகுபாடோ ஜாதி பாகுபாடோ  இருந்ததில்லை.



வர்ண அமைப்புக்கு வெளியே வாழ்ந்தனர்.



நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர்.



ஆடு> மாடு செல்வங்களை பெற்று வேட்டையாடி வாழ்ந்து வந்தனர்.


எப்பொழுதும் மற்றவர்களிடம் போரிட்டு வந்தனர். ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக சிதறி இருந்தனர்.


மக்களை பிளவுபடுத்தி வர்ணாசிரம தர்மமுறையை நிலைபெற செய்தனர்.

வர்ண அமைப்புக்குள் படிமுறை அமைப்புடன் வாழ்ந்தனர்.

வர்ண அமைப்புக்கு வெளியே இருப்பவர்களை (திராவிடர்களை) இவர்கள் வேத, இதிகாச புராணங்களில் தஸ்யுக்கள் என்றும்; ராட்சதர்கள் என்றும்; மிலேச்சர்கள் என்றும்; சண்டாளர்கள் என்றும்; அசுரர் என்றும்; பஞ்சமர் என்ற பல்வேறு பெயர்களில் அழைத்தனர். இப்படிப்பட்ட வர்ண அமைப்புக்கு வெளியே இருப்பவர்களை வெல்லுவதற்கும், இவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கும், சண்டைகளும் மத சடங்குகளும் நடத்தப்பட்டன.


தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 1

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 2




No comments:

Post a Comment