Sunday, June 2, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 4

நாகர்கள் - தாசர்கள் - திராவிடர்கள்...

ஆரியரல்லாத நாகர்கள் மிகப் பழமை வாழ்ந்த மனிதர்களாக ரிக் வேத குறிப்புகள் காட்டுகின்றன. நாக வழிபாடு இவர்களுடையதே. ஓர் உயர்ந்த பண்பாட்டை பெற்ற இவர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்ததோடு இந்தியாவின் பெரும்பகுதியையும் ஆண்டு வந்தனர். இந்தியாவின் மகாரஷ்ட்ரம் முழுவதும் பரவி இருந்ததுடன் மன்னரும் மக்களும் நாகர்களே. கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆரம்ப காலங்களில் ஆந்திரப்பிரதேசமும் அதன் சுற்றுப்புற பகுதிகளும் நாகர்களில் ஆட்சியில் இருந்தன. கி.பி.4 ன் துவக்கத்தில் வடஇந்தியா பல நாக அரசர்களால் ஆளப்பட்டு வந்தன.  பாகிஸ்தானில் உள்ள காரச்சிக்கு அருகில் மஜேரிகா என்ற நாகதேசம் இருந்துள்ளது. வடஇந்தியாவில் குஷான சாம்ராஜ்யம் கி.பி.4ல் வெற்றிகொள்ளப்பட்டு சமுத்திர குப்தர் வரும் வரை ஆளப்பட்டுள்ளது. கி.பி.6ல்  சௌராஷ்டிரவை நாகர் ஆண்டனர். சாதவாகனர்களும் அவர்களுக்கு பின் வந்த சுட்டு குல சாதகர்னிகர்களும் நாகர்களின் வாரிசுகளே...

கி.பி.9 ல் மத்திய இந்தியாவில் நாகர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பல்லவ கல்வெட்டுக்கள், ஷர்ஷ கல்வெட்டுக்கள் நாகர் குடும்பங்களுடன் கொண்ட மண உறவுகளை தெளிவாக்குகின்றன. இரண்டாம் சந்திர குப்தர், ராஜேந்திர சோழன் மற்றும் அஸ்வத்தாமா போன்ற மன்னர்கள் நாகர் பெண்களை மணந்துள்ளனர். நாகர்கள் வடமேற்கில் தஷ்சீலவிலிருந்து, வடகிழக்கில் அஸ்ஸாம் வரையிலும்; தெற்கில் தென்னிந்தியாவிலிருந்து சிலோன் வரையிலும் வியாப்பித்திருந்தனர். கி.பி. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் நாக நாடுகளை பற்றி அறிகிறோம். மலபார், திருவாங்கூர், நாகர்கோயில் ஆகிய இடங்களில் இன்றும் நாகபூஜையை காணலாம். நாகர் பெண்கள் அழகுள்ளவர்களாக இருந்ததினால் பின்னாளில் ஆட்சிக்கு வந்த சேரர்களுடன் மண பந்தங்களில் கலந்துள்ளனர். சேரர் பழந்தமிழ் சாராய் என்பது நாகாவன் திராவிட சமச்சொல். சேரமண்டலம், நாகத்வீபா () நாகதேசம் ஆகியவை தெற்கு வாழ் திராவிடர்களின் அசுரர்தோன்றுதலை குறிக்கும். கங்கை பள்ளத்தாக்கின் பெரும்பகுதியில் பரவியுள்ள சேருக்கன் என்பவர் மிகப் பழங்கால இனத்தவர். இவர்கள் திராவிட சேரர்களின் பந்தங்களே. மேலே கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து தென்னிந்தியாவில் வசிக்கும் திராவிடர்கள் தான் வடஇந்தியாவில் வசிக்கும் நாகர்கள் () அசுரர்கள் என்பது உண்மை. ஆகா தாசர்-நாகர்-திராவிடர் என்பன ஒரே மக்களை குறிக்கும் சொற்களே...

இதில் "திராவிடர்" என்ற சொல் ஒரு மூல சொல்லல்ல என்பதை கவனித்தல் வேண்டும். திராவிடா என்ற சொல் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட "தமிழ்" என்ற சொல்லின் வடிவமே... மூலச் சொல்லான தமிழ் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட போது தமிலா (Damila) பிறகு த்ரமில்லா (Dramilla) என்றாகி திராவிடா (Dravida) என மருவியது. திராவிடா என்ற சொல் ஒரு மொழியின் பெயரை குறிப்பது. ஒரு மக்களினத்தை குறிப்பதல்ல. தமிழ் அல்லது திராவிட என்பது தென்னிந்தியாவில் மட்டும் பேசப்பட்ட மொழியல்ல. ஆரியர் வருகைக்கு முன் அனைத்து இந்தியா அளவிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழியாகும். ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் ஏற்பட்ட உறவின் காரணமாக வடஇந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டுவிட்டு அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தை வைத்தனர். தென்னிந்தியா நாகர்கள் தாய் மொழியான தமிழை மட்டும் வைத்துக்கொண்டு சமஸ்கிருதத்தை ஒதுக்கினர். இதனால் தான் திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களுக்கு மட்டுமே ஒருமித்து நின்றது. ஒரே மக்களின் கலாச்சார () இனம் பெயராக திராவிடர் என்றும் வழங்கப்பட்டது. ஆகவே தாசர்கள் தான் நாகர்கள், நாகர்கள் தான் திராவிடர்கள் இனம் என்று பார்த்தால் இந்தியாவில் ஆரியர்-நாகர் என்ற இரண்டு இனம் மட்டுமே இருந்தன என்பது வரலாற்று உண்மை...

(தொடரும்...)

No comments:

Post a Comment